lan sinlan eng

செய்தி

திரிஷாவிற்கு அபராதம் விதித்தது தமிழக வருமானவரித் துறை

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

தமிழக அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகை திரிஷாவின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.

சோதனையின் பின்னர், நடிகை திரிஷாவின் வருமானம் 3 கோடியே 50 இலட்சம் என்று நிர்ணயம் செய்தனர். அதன்பிறகு இந்த கணக்கிற்கு ஏற்றவாரு திரிஷா வரியையும் செலுத்தினார். எனினும் திரிஷா உண்மை கணக்கை மறைத்தார் என்று வருமான வரித்துறையினர் நடிகை திரிஷாவுக்கு ஒரு கோடியே கோடியே 11 லட்சம் அபராதம் விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நடிகை திரிஷா முறையிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், வருமான வரித்துறை சுட்டிக்காட்டிய வருமானத்துக்கு திரிஷா கணக்கு காட்டி, வரியையும் செலுத்தியுள்ளார். எனவே, அவருக்கு அபராதம் விதிப்பது தேவையற்றது என்று கூறி, அந்த அபராதத்தை இரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றில் வருமான வரித்துறை ஆணையர் மேல்முறையீடு செய்தார். அண்மையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி