lan sinlan eng

செய்தி

திரைப்படங்கள் வெளியாகும் திகதியை பதிவு செய்ய கோரிக்கை

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

ஜனவரி 2018 வரையிலான திரைப்படங்களின் வெளியீட்டு திகதியை உடனடியாக தயாரிப்பாளர் சங்க அலுவலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலமுனைப் பிரச்சினைகளால் அனுதினமும் மிகப்பெரிய பொருள் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற முனைப்புடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இயங்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் படங்களின் வெளியீட்டு திகதியை தயாரிப்பாளர் சங்க அலுவலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அச்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தற்போது திரைத்துறையில் நிலவி வரும் திரைப்பட வெளியீடு சம்பந்தப்பட்ட குழப்பங்கள் மற்றும் அதனை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு தங்களது தயாரிப்பில் உருவாகி வரும் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் ஜனவரி 2018 வரையிலான திரைப்படங்களின் வெளியீட்டு திகதியை உடனடியாக தயாரிப்பாளர் சங்க அலுவலத்தில் பதிவு செய்ய வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி