lan sinlan eng

செய்தி

பாகுபலியை தங்கலுடன் ஒப்பிட வேண்டாம்; அமீர்கான் வேண்டுகோள்

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

தங்கல்' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களையும் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் அமிர்கான் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் 'பாகுபலி 2' பெரும் வசூல் சாதனை செய்து வருகிறது. இதுவரை 1565 கோடி வசூல் செய்துள்ளது. எனினும் அமிர்கானின் நடிப்பில் வெளியான 'தங்கல்' திரைப்படம் சீனாவில் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. அங்கு 750 கோடி வசூலை கடந்து, அப்படமும் 1500 கோடி வசூலை எட்டியுள்ளது.

இரண்டு படங்களுமே உலக அளவில் இந்திய சினிமாவை பெருமிதம் கொள்ள வைத்திருக்கிறது என்று பொலிவுட் வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு 'சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. அந்நிகழ்வில் பங்கேற்ற அமீர்கான் பேசும் போது, "சீனா மட்டுமன்றி உலகளவில் 'தங்கல்' படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பால் மகழ்ச்சி. ஆனால் இரண்டு படங்களையும் ஒப்பிடுவது தேவையற்றது.

நான் இன்னும் 'பாகுபலி 2' பார்க்கவில்லை. ஆனால் அப்படத்தைப் பற்றி பல்வேறு விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். மிகவும் வெற்றிகரமான படம் 'பாகுபலி 2'.

இரண்டுமே படங்களுமே அந்தந்த களங்களில் சிறந்த படங்கள். இரண்டுமே இந்தியப் படங்களாக உருவாகி, நமது நாட்டை பெருமிதம் கொள்ள வைத்திருக்கிறது.

உலக அளவில் 'பாகுபலி 2' வெற்றியால், ஒரு இந்திய இரசிகனாக பெருமிதம் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி