கேம்பிரிஜ் சீமாட்டி கேட் மிடில்டனின் மேலாடை அற்ற நிழற்படங்கள் பிரான்ஸ் சஞ்சிகையொன்றில் வெளியிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அறுவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தனிப்பட்ட உரிமையில் தலையிட்டதாகவும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் குறித்த அறு பேருக்கும் எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கேம்பிரிஜ் இளவரசர் மற்றும் சீமாட்டி ஆகியோர் 2012 ஆம் ஆண்டு விடுமுறைக்காக பிரான்ஸ்சிற்கு சென்ற போது கேட் மிடில்டனின் மேலாடை அற்ற நிழற்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிழற்படங்கள் பிரான்ஸ்சின் சஞ்சிகையொன்றிலும் பிராந்திய பத்திரிகையொன்றிலும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
இந்த செயற்பாட்டுக்காக குறிப்பிடத்தக்க அளவான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என வழக்கு தொடுநர் வலியுறுத்தியுள்ள நிலையில், மிகப் பாரிய அளவான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோர் சட்டத்தரணி ஊடாக கோரியுள்ளனர்.