lan sinlan eng

செய்தி

143 படகுகளை மீட்க மணல் சிற்பம்

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள 143 படகுகளை மீட்க வேண்டும் என வலியுறுத்தி இராமேஸ்வரம் கடற்கரையில் மணற் சிற்பம் வரைந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் இரண்டரை ஆண்டுகளில் 143 படகுகளை கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இரண்டு மாத சிறைவாசத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர். எனினும் 143 படகுகள் மாத்திரம் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க வலியுறுத்தி புதன்கிழமை இராமேஸ்வரம் கடற்கரையில் மணற் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனியார் பாடசாலை ஆசிரியர் சரவணன் பொது மக்கள் அதிகம் கூடுமிடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மணற் சிற்பங்களை வரைந்து வருபவர்.

மணற் சிற்பம் குறித்து சரவணன் கூறியதாவது, ''அமாவாசை தினம் அன்று தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமிலிருந்து பக்தர்கள் புனித நீராடுவதற்காக இராமேஸ்வரம் வருகை தருவார்கள். இந்த தருணத்தில் தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பதை வலியுறுத்துவதற்காக மணல் சிற்பம் உருவாக்கி உள்ளேன். இதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்“ என நம்பிக்கை தெரிவித்தார்.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி