துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றிவரும் வவுனியாவை சேர்ந்த கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞரின் பயணம் திருகோணமலையை சென்றடைந்துள்ளது.
இந்த நிலையில், வவுனியாவில் ஆரம்பமான பிரதாபனின் பயணம் இன்று 10 ஆவது நாளாக தொடர்கின்றது.
இலங்ககையில் வயோதிபர் இல்லங்களை இல்லாதொழிக்குமாறு கோரியும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குமாறு கோரியும் வவுனியாவை சேர்ந்த கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் துவிச்சக்கர வண்டியில் ஸ்ரீலங்காவை சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார்.
கடந்த 8ஆம் திகதி வவுனியா கந்தசாமி கோவில் விசேட வழிபாடுகளை மேற்கொண்ட கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் தமது பயணத்தை ஆரம்பித்தார்.
இந்த பயணத்தின் மூலம் 11 நாட்களில் 1,515 கிலோ மீற்றர் தூரத்தினை சுற்றிவரவுள்ளார்.
வயதுமுதிர்ந்த காலத்தில் பராமரிக்க எவரும் இல்லாது அநாதைகளாக எவரும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த முயற்சியை தாம் மேற்கொண்டாக தர்மலிங்கம்பிரதாபன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சைக்கிளில் சுற்றி உலாவரும் த.பிரதாபன் நேற்று காலை 9 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.