பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் வசந்த ஒபேசேகர தனது 80ஆவது வயதில் இன்று காலமாகியுள்ளார்.
1967ஆம் ஆண்டில் சினிமா துறையில் காலடியெடுத்து வைத்த இவர், 1970ஆம் ஆண்டு சிங்கள சினிமாத் துறையில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தனது முதலாவது விருதைப் பெற்றுள்ளார்.
வெட்டுக்கிளிகள் (பலங்கெட்டியோ) என்ற திரப்படத்தை இயக்கியமைக்காக 1979ஆம் ஆண்டு சிறந்த இயக்குனர் என்ற ஜனாதிபதி விருதும் விருதும் இவருக்கு கிடைத்துள்ளது. சுமார் 13 திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (தற்போதைய கொழும்புப் பல்கலைக்கழகத்தின்) 1962 ஆம் ஆண்டு பட்டதாரியானார்.
1964ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டு வரைய லேக் ஹவுஸ் பத்திரிகையில் ஆசிரியர் பீட எழுத்தாளராக கடமையாற்றியுள்ளார். இக்காலப் பகுதியில் இவர் சிறுகதைகளை எழுதுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.