இலங்கையில் வயோதிபர் இல்லங்களை இல்லாதொழிக்க 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வவுனியாவை சேர்ந்த கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் சைக்கிளில் இலங்கை சுற்றிவரவுள்ளார்.
வவுனியா கந்தசாமி கோவில் முன்பாக இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு தனது பயணத்தினை அவர் ஆரம்பித்துள்ளார்.
ஸ்ரீங்காவில் வயோதிபர் இல்லங்களை இல்லாதொழிக்க 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சைக்கிள் பயணத்தை இன்று ஆரம்பிக்கும்தர்மலிங்கம் பிரதாபன் 11 நாட்களில் 1,515 கிலோ மீற்றர் தூரத்தினை சுற்றிவரவுள்ளார்.
வவுனியாவில் தனது பயணத்தினை ஆரம்பிக்கும் இவர் சுமார் 11 நாட்களில் இலங்கை சுற்றி வருவதற்கான கால எல்லையை நிர்ணயித்து தனது பயணத்தினை ஆரம்பித்துள்ளார்.
ஸ்ரீங்காவில் வயது முதிர்ந்த காலத்தில் பராமரிக்க எவரும் இல்லாது அநாதைகளாக எவருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த முயற்சியை மேற்கொண்டாக தர்மலிங்கம் பிரதாபன் தெரிவித்துள்ளார்.