கடந்த 2016ஆம் ஆண்டின் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக விராட் கோஹ்லியை விஸ்டன் அறிவித்துள்ளது.
இந்திய அணியில் தற்போது தலைவர் விராட் கோஹ்லி. “ரன் மெசின்“ என தற்போது எல்லோராலும் அழைக்கப்படுகின்றார்.
கோஹ்லியின் தலைமையில், நியூசிலாந்து, பங்களாதேஷ், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.
இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டின் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக விராட் கோஹ்லியை விஸ்டன் அறிவித்து அவருக்கு புதிய மகுடத்தை சூட்டியுள்ளது.
கடந்த ஆண்டு விராட் கோஹ்லி 75.93 என்ற சராசரியில் 1,215 டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 10 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 739 ஓட்டங்களையும், இருபதுக்கு-20 போட்டிகளில் 642 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
விராட் கோஹ்லியைத் தவிர இந்திய அணியின் விரேந்தர் செவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டது.
2017 விஸ்டன் கிரிக்கட்டர்ஸ் அல்மனாக் அட்டைப்படத்தில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். டெண்டுல்கருக்கு பிறகு விஸ்டன் அட்டைப்பக்கத்தில் இடம் பிடிக்கும் இரண்டாவது இந்திய வீரர் விராட் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது.