lan sinlan eng

செய்தி

அதிக பெறுமதி மிக்க இளஞ்சிவப்பு நிற வைரம் ஏலத்தில் விற்பனை

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

உலகின் அதிக பெறுமதி மிக்க இளஞ்சிவப்பு நிற வைரம் 71.2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. இந்த ஏல விற்பனை ஹொங்கொங்கில் இடம்பெற்றது.

மிகப் பெரியதும், தெளிவானதுமான இந்த வைரம் 59.6 கரட் எடைகொண்டது.

ஐந்தே நிமிடங்கள் மட்டுமே நீடித்த வைரத்துக்குரிய ஏலம் மூன்று பேருக்கிடையில் இடம்பெற்ற ஏலக்கூறல்களை அடுத்து சோ தை புக் (Chow Tai Fook) என்ற  நகை விற்பனையாளர் அதனை கொள்வனவு செய்துள்ளார்.

இதுவே உலகில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வைரமாகவும் உலக சாதனை படைத்துள்ளது.

57.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மற்றுமொரு பெரிய வைரம் ஒரு வருடத்துக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி