lan sinlan eng

செய்தி

பின்னணி பாடகர் பாலசுப்பிரமணியத்தின் கடவுச்சீட்டை காணவில்லை

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவில் தங்கியிருந்த எஸ்பிபி அவர்களின் கடவுச்சீட்டு மற்றும் கடனட்டை பணம் ஆகியவை மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தபோது இவை அனைத்தையும் எஸ்பிபி ஒரு பையில் வைத்திருந்ததாகவும், அந்த பை காணாமல் போய்விட்டதாகவும் தெரிகிறது.

காணாமற்போயுள்ள அந்த பையில் எஸ்.பி.பியின் கடவுச்சீட்டு மற்றும் கடனட்டை பணம் பாடல் குறிப்புகள் அடங்கிய ஐபேடும் இருந்துள்ளதாக  தெரியவந்துள்ளது.

தனது கடவுச்சீட்டு திருடு போனமை குறித்து எஸ்பிபி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து அவர் நாடு திரும்ப வசதியாக மாற்று கடவுச்சீட்டு ஒன்றை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் திருடு போன எஸ்பிபியின் பையை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் அமெரிக்க பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி