இந்திய சினிமாவில் நடிப்பு என்றாலே இன்று வரை சிவாஜி தான் எல்லோருக்கும் முன் உதாரணம். இவர் தன் வாழ்வில் பார்க்காத வெற்றிகளே இல்லை.
உலக அளவில் புகழ் அடைந்த சிவாஜிக்கு ஒரு படத்தில் முழுக்க முழுக்க வில்லனாக நடிக்க வேண்டும் என்று விருப்பமாம்.
அதிலும் டபூள் ஆக்ஷன் என்றில்லாமல் வேறு ஒரு நடிகர் ஹீரோவாக நடிக்க, தான் அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று விருப்பமாம்.
ஆனால், கடைசி வரை சிவாஜி அவர்களுக்கு அந்த வாய்ப்பு அமையாமல் போனது வருத்தம் தான். இதை ஆனந்த்ராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.