அஜித் நடிப்பில் விவேகம் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகின்றது.
நேற்று படத்தின் ஒரு சண்டைக்காட்சி எடுத்து வருகின்றனர், படப்பிடிப்பு தளத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தை சிவா தன் டுவிட்டரில் வெளியிட்டார்.
அதில் அஜித் தாடியுடன் காணப்படுகின்றார், இதன் மூலம் இவை தான் செகண்ட் லுக் என தெரிகின்றது.
மேலும், அஜித் யாரையோ இழந்து, அதற்காக பழி வாங்குவது போல் தான் கதை இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.
ஒரு வேளை காஜலை கொன்றதற்கு தான் அஜித் பழி வாங்க கிளம்புவாரா? என பல கதைகள் உலா வர தொடங்கிவிட்டது.