விஜய் - அட்லீ தற்போது இரண்டாவது முறையாக இணையும் படத்தின் ஷூட்டிங் நடந்துவருகிறது. விஜய் மூன்று ரோலில் நடிப்பதால் இந்த படத்திற்கு ரஜினியின் 'மூன்றுமுகம்' அல்லது தளபதி என பெயரிடப்படலாம் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.
இந்நிலையில் இது பற்றி விஜய் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய தகவல்களை நம்ப வேண்டாம், தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும் விஜய் ரசிகர்களுக்கு பல வியப்பூட்டும் விஷயங்கள் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.