சாய் ரமணி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் மொட்ட சிவா கெட்ட சிவா. இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதோடு சமீபத்தில் டைட்டில் கார்ட்டில் வந்த வாசகத்திற்காக பெரிய பிரச்சனையே ஏற்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நலச்சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் நேற்று மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வெளியாகி உள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இந்து மத நம்பிக்கையையும், அடையாளங்களையும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு இந்துக்கள் பூஜிக்கும் சிவனின் பெயரை இழிவுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே படக்குழு மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.