இளைய தளபதி விஜய்யுடன் கூட்டணி அமைக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் வெயிட்டிங். அப்படியிருக்க தீவிர விஜய் ரசிகரான AGS நிறுவனத்தை சார்ந்த அர்ச்சணா விஜய்யுடன் ஒரு படத்திலாவது கூட்டணி அமைப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவர்கள் தயாரிப்பில் மார்ச் 31ம் தேதி கவண் படம் திரைக்கு வரவிருக்கின்றது, இந்நிலையில் இவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அனேகன் படம் இளைய தளபதி விஜய்க்காக எழுதப்பட்டு, பின் மாற்றப்பட்டதா?’ என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் ‘உண்மையாகவே அந்த படம் விஜய் சாருக்காக எழுதப்படவில்லை, அது வெறும் வதந்தி மட்டுமே, யார் இப்படி கிளப்பிவிடுவது?’ என்று கூறியுள்ளார்.
மேலும், கூடிய விரைவில் எப்படியாவது விஜய் கால்ஷிட்டை வாங்குவதே தன் லட்சியம் என தெரிவித்துள்ளார்.