சிம்பு தனுஷ் இருவருமே நண்பர்கள் தான். சில நிகழ்ச்சிகளில் அவர்கள் ஒன்றாக இருப்பதை பார்த்திருப்பீர்கள். சிம்பு சிலரின் முயற்சியை தனக்கு பிடித்திருந்தால் யோசிக்காமல் உடனே பாராட்டிவிடுவார்.
தனுஷ் இயக்கும் பவர் பாண்டி பாண்டி படத்தின் பாடல்கள் நேற்று இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இப்போது நடிகர் சிம்பு, தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் சீன் ரோல்டனுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் அதில் தனக்கு சூரக்காத்து பாடல் பிடித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.