விஷால் எப்போதும் உடனுக்குடன் அதிரடி முடிவுகளை எடுப்பவர். அப்படித்தான் திருட்டு விசிடி பிடிப்பதில் ஆரம்பித்து, நடிகர் சங்க தேர்தல் வரைக்கு பல அதிரடி விஷயங்களை நிகழ்த்தி காட்டினார்.
இந்நிலையில் சமீபத்தில் பரத் நடிக்கும் சிம்பா இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேசுகையில் ‘சிம்பா படத்திற்கு முதல் நாள் திருட்டு விசிடி வராது.
அதற்கு நான் பொறுப்பு, இந்த முறை நீயா, நானா பார்த்துருவோம்டா’ என ஆவேசமாக சவால் விட்டார், மேலும், சிம்பா படத்திற்கு நல்ல ரிலிஸ் தேதி பெற்றுத்தருவது என் கடமை என்றும் கூறியுள்ளார்.