நடிகை கீர்த்தி சுரேஷ் எல்லோருக்கும் பிடித்த ஃபேவரைட் ஹீரோயினாகி விட்டார். சிவகார்த்திகேயன், விஜய் என முன்னணி நடிகர்களோடு நடித்தவர் தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் புது படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் தனது மார்க்கெட்டை இன்னும் வலுவாக்க முன்னணி ஹீரோக்களாடு நடிப்பது மட்டுமில்லாமல் வளர்ந்துவரும் ஹீரோக்களுடனும் நடித்தால் அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் படம் வெளியாகும் என மாஸ் பிளான் போட்டுள்ளாராம்.
இதற்காக டோலிவுட்டில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாராம் . கையில் இப்போதே இரண்டு தெலுங்கு பிராஜக்ட்டுகளை ஓகே செய்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.