கபாலி, தெறி என பிரமாண்ட ஹிட் படங்களை கொடுத்தவர் தாணு. இந்த படங்கள் வெற்றியே இல்லை, தோல்வி தான் என ஞானவேல்ராஜா கூறினார்.
இதை தொடர்ந்து விஷால் தன் அணியினருடன் தயாரிப்பாளர் சங்க தேர்தல் களத்தில் குதிக்கவுள்ளதாக நேற்று அறிவித்தார்.
தாணு இதையெல்லாம் பார்த்து பொறுமை இழந்து இன்று காலை நடிகர் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது ‘விஷாலால் பல விநியோகஸ்தர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டனர்.
மேலும், விஜய் இளைய தளபதி என்றால் இவர் புரட்சி தளபதியாம், அவர் புலி என்று டைட்டில் வைத்தால் இவர் பாயும் புலி என்று வைக்கின்றார், இதெல்லாம் என்னவென்று சொல்வது?’ என கோபமாக கூறியுள்ளார்.