நடிகர் மாதவன் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக இருந்தவர். லவ் ரொமான்ஸ் படங்களில் நடித்ததாலோ என்னவோ அவருக்கு அப்படி ஒரு பெயர் வந்துவிட்டது.
பிரபல இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும் சில நாட்களிலேயே ஹிந்தி சினிமா சென்றுவிட்டார். பின் சில மாதங்களுக்கு முன் வந்த இறுதிசுற்று படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
படமும் ஹிட்டானது. மீண்டும் படங்களில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவர் ஏ.எல்.விஜய் இயக்கும் வனமகன் படத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி நடிக்க தமிழ், ஹிந்தி என இரண்டிலும் தயாராகிறது.
தற்போது ஹிந்தி மொழியாக்கதிற்கு டயலாக் எழுதும் பணியை மாதவன் கையில் எடுத்திருக்கிறாராம்.