lan sinlan eng

செய்தி

பாவனாவுக்கு அடுத்த ஆண்டு டும் டும் டும்!

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

பாவனாவுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடக்க உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அவருக்கு மிகவும் நெருக்கமான தோழிகள் உறுதி செய்துள்ளனர்.

பாவனா கன்னட திரையுலகின் இளம் தயாரிப்பாளர் ஒருவரை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். அவரை தான் திருமணம் செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது.

தனது காதலர் பெயரை பாவனா இதுவரை தெரிவிக்கவில்லை. திருமணம் நிச்சயமாகியும் பெயரை கூறவில்லை. திருமணம் வரை அவரின் பெயரை ரகசியமாகவே வைக்க உள்ளாராம் பாவனா.

அழைப்பு பாவனாவின் திருமணம் பதிவுத் திருமணமாம். நெருங்கிய தோழிகள், குடும்பத்தார் என 50 பேருக்கு மட்டுமே அழைப்பாம். இந்த ஆண்டே பாவனாவின் திருமணம் நடக்க வேண்டியது. அவரது தந்தை மரணம் அடைந்ததால் திருமணம் தள்ளிப் போடப்பட்டது.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி