உலக வாழ் தமிழ் – சிங்கள மக்களால் இன்று சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது.
தமிழ்ப் புத்தாண்டு என்பது, தமிழர்களின் புதிய ஆண்டு ஆரம்பமாவதைக் கொண்டாடும் நிகழ்வாகும்.
இலங்கை இந்தியா மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.
இலங்கை வாழ் தமிழ் சிங்கள மக்களும் சித்திரை மாதத்தின் முதல் நாளையே புதுவருடமாக கொண்டாடுகின்றனர்.
2018 ஆம் ஆண்டானது விளம்பி என்ற பெயருடன் உதயமாகியுள்ளது.
புதுவருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று காலை 7 மணிக்கும் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி காலை 8.13 க்கும் பிறந்துள்ளது.
இதன்படி புண்ணிய காலம் அதிகாலை 3 மணியில் இருந்து 11 மணி வரை என கணிப்பிடப்பட்டிருக்கின்றது.
இன்றைய நாளில் பெற்றோர் குரு பெரியவர்களை வணங்கி ஆசிபெறல் வேண்டும். உற்றார் உறவினர் நண்பர்களுடன் அளவளாவி வாழ்த்துக்கள் தெரிவித்து போஜனம் மேற்கொண்டு தாம்பூலம் அருந்தி மகிழ்தல் புதிய வருட பலாபலன்களை வாசித்தும் கேட்டும் நன்குணர்ந்து புதிய வருடத்தில் ஆற்றக் கூடிய நற்கருமங்களைச் சிந்தித்தும் அரிய தவத்தாற் பெற்ற மானிடப்பிறவியில் செய்யக் கூடியனவற்றை இனிது நிறைவேற்றி மங்களகரமாக வாழ்வோமாக.
Tamil mirror arts.lk உறவுகளுக்கு இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்