நடிகை ஸ்ருதி ஹாசன் கடைசியாக சூர்யாவின் சி3 படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் சங்கமித்ரா படத்தில் நடிப்பதாக இருந்தது, ஆனால் அவர் பின்னர் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் அவர் அடுத்து ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு தற்போது ட்விட்டரில் 7 மில்லியன் பாலோவர்ஸ் என்ற மைல்கல்லை கடந்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் #7millionheartsforshruthi என்ற ஹாஸ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தென்னிந்திய நடிகைகளில் ஸ்ருதிஹாசன் முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா 6.5 மில்லியன் பாலோவர்ஸுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.