ஜில்லா படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்திருந்தவர் மஹத். அவர் அஜித்தின் மங்காத்தா, சென்னை 28, சிம்புவின் AAA உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்கள் முன்பு இவர் நடிகை டாப்ஸியை காதலித்து வந்தார்
இந்நிலையில் தற்போது மஹத் 2012ல் மிஸ் இந்தியா எர்த் பட்டம் வென்ற பிராச்சி மிஷ்ரா என்ற நடிகையுடன் காதலில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு வருடத்திற்கு முன்பு துபாயை சேர்ந்த அந்த நடிகையை மஹத் ஒரு விழாவில் சந்தித்துள்ளார். இருவரும் தற்போது ஒன்றாகவே பல இடங்களில் சுற்றுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இருவரும் ஒன்றாக ஆஸ்திரேலியாவிற்கு விடுமுறைக்காக சென்றதாகவும் தெரிகிறது.