கமல்ஹாசன் இளைய மகள் அக்ஷரா ஹாசன். உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர், பிறகு நடிக்க வந்தார்.
அமிதாப்பச்சன், தனுஷ் நடித்த ‘சமிதாப்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்து அஜீத்துடன் ‘ஆரம்பம்’ படத்தில் நடித்தார்.
இந்நிலையில் திடீரென்று வெப் சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அக்ஷரா. இதில் முதன்முறையாக சண்டை காட்சிகளிலும் நடிக்க உள்ளதால் ஸ்டண்ட் பயிற்சி பெறுகிறார்.
சமீபகாலமாக முறைப்படியும் கடுமையாகவும் ஸ்டண்ட் பயிற்சி பெற்று வருகிறேன். புதிதாக உருவாகும் ‘குட் பய் கேர்ள்’ என்ற வெப் சீரியலில் நடிக்கிறேன். இதற்காகத்தான் சண்டை பயிற்சி பெறுகிறேன். இதற்கு முன் இதுபற்றி எனக்கு கொஞ்சமும் தெரியாது என்பதால் பதற்றத்துடன் பயமும் கலந்திருக்கிறது.
சினிமாவில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வருகிறது. அதேசமயம் சில வித்தியாசமான அணுகு முறைகள் வெப் சீரியல்களில் காட்ட முடியும் என்று எண்ணுகிறேன்.
கதை சொல்லும் விதமும் வித்தியாசமாக இதில் அமைக்கப்படுகிறது. எனவேதான் வெப் சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டேன். குறிப்பாக தற்போது ஒப்புக்கொண்டிருக்கும் இக்கதை எனக்கு மிகவும் பிடித்தது. பட ஸ்கிரிப்ட்டும் இதேபோல் என்னை கவர்ந்தால் உடனே ஏற்பேன்’ என்று அக்ஷரா ஹாசன் தெரிவித்தார்.