அவேஞ்சர்ஸ் 2012லும், அதன் 2ம் பாகம் அவேஞ்சர்ஸ் அல்ட்ரான் 2015லும் வெளியானது.
தற்போது அதன் 3ம் பாகம் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், 22 ஹீரோக்கள் ஒரு வில்லனுடன் (தாநோஸ்) மோதும் வகையில் வெளியாகிறது.
ராபர்ட் டவுனி ஜூனியர், ஐயர்ன் மேன் கேரக்டரில் நடிக்கிறார். மற்றும் க்ரிஸ் ஹேம்ஸ்வார்த், மார்க் ரூபலோ ப்ருஸ் பன்னேர், க்ரிஸ் ஈவனஸ் ஸ்டீவ் நடித்துள்ளனர்.
படத்தின் தெலுங்குப் பதிப்பில் இடம்பெறும் தாநோஸ் கேரடருக்கு ராணா டப்பிங் பேசியுள்ளார். அந்தோணி ரூசோ, ஜோ ரூசோ இயக்கியுள்ளனர். வரும் ஏப்ரல் 27ம் தேதி இந்தியாவில் படம் வெளியாகிறது.