பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் கவிஞர் சினேகன். அவர் பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். சில படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் மதுரையில் கட்சி தொடங்கியபோது சினேகன் கலந்துகொண்டார்.
அண்மையில் அவர் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருக்கிறார். அப்போது அவரிடம் உங்கள் தொகுதிக்காக தேர்தலில் நிற்பீர்களா என கேட்டதற்கு கமல் சார் சொன்னால் நான் ரெடி. கண்டிப்பாக நிற்பேன் என கூறியுள்ளார்.
அப்படி இல்லாவிட்டாலும் சாதாரண தொண்டனாகவும் அவருடன் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்வேன் கமல் சாரின் கொள்கைகள் எனக்கு பிடித்திருக்கிறது என கூறியுள்ளார்.