பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவிற்கு அதிக ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். ஓவியா தற்போது 90ml என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு நடிகர் சிம்பு தான் இசையமைக்கிறார் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் அனிதா உதீப் இந்த படத்தின் கதை பற்றி விவரித்துள்ளார். "ஐந்து பெண்கள் - அதில் ஒருவர் ஓவியா, அவர்களுக்கு இருக்கும் ஆசைகள் பற்றியது தான் முழு கதையும்.
"ஆனால் இந்த படத்தில் ஓவியா இந்த ரோலில் போல்டாக நடித்துள்ளார். 90ml சாதாரண பெண்களை கவரும் விதத்தில் குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக IT யில் பணியாற்றும் பெண்களை இது அதிகம் கவரும்" என இயக்குனர் அனிதா கூறியுள்ளார்.