நடிகர் கார்த்தி தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பொலிஸ் படும் இன்னல்களை விவரிக்கும் வகையில் நடித்திருந்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் பொலிஸ் பணி பற்றி உயர்வாக பேசினார்.
"நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடிப்பதே இவ்வளவு கஷ்டம் என்றால், நேர்மையாக இருப்பது எவ்வளவு கடினம் என்று தீரன் படம் நடிக்கும் போது எனக்கு தெரிந்தது. பொலிஸ்சார் இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறார்கள் அவர்களுக்கு பொதுமக்கள் மரியாதை அளிக்க வேண்டும்." பணியில் உள்ள காவலர்கள் தற்கொலை செய்யும் சம்பவம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது என கார்த்தி பேசியுள்ளார்.