சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கேங்ஸ்டர் படம்" காலா" ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது நடந்துவரும் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தம் காரணமாக மார்ச் 1ம் தேதி முதல் எந்த புதிய படமும் வெளியாகவில்லை. அதனால் வேலைநிறுத்தம் முடிந்து வெளியாக துவங்கும் போது மார்ச் மாதம் வெளியாகவேண்டிய படங்கள் சென்சார் தேதி அடிப்படையில் வெளியாக முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனால், காலா படம் ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்பில்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. எனினும் இது பற்றிய அறிவிப்பு வேலைநிறுத்தம் முடிந்தபிறகு தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை 125 கோடி ரூபாய்க்கு லைகா நிறுவனம் வாங்கி வெளியிடுகின்றது.