ஜெயம் ரவி நடிப்பில் ரோமியோ ஜுலியட் என்ற படம் தயாராகி இருந்தது. அப்படத்தில் இடம்பெற்ற டண்டனக்கா என்ற பாடலில் டி.ஆர் அவர்களின் வசனங்கள் இடம்பெறும்.
தற்போது இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் விளம்பர நோக்கத்துடனும், உள்நோக்கத்துடனும் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு இடையே என்னுடைய பேச்சுக்கள், வசனங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
எனது வசனங்களை பயன்படுத்த அவர்களக்கு உரிமை இல்லை, என்னிடம் அனுமதியும் பெறவில்லை.
தொலைக்காட்சி, வானொலி என அந்தப் பாடலை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும். என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க படத் தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடியவர் ஆகியோருக்கும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளார்.