மலையாள நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கேரளாவில் பிரபல நடிகையை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை 10ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவர் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
நடிகர் திலீப் பிணை மனுவை முதன்முதலில் அங்கமாலி நீதிமன்றம் மறுத்தது. இதனையடுத்து அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்தார்.
ஆனால், திலீப்பை பிணையில் விடுவித்தால், விசாரணை பாதிக்கப்படும் என பொலிஸ் தரப்பு கூறியதையடுத்து, திலீப் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் திலீப் கைதாகி 85 நாட்களுக்கு மேலாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதை நீதிமன்றத்தில் திலீபின் சட்டத்தரணி சுட்டிக் காட்டி வாதாடினார். அரசு தரப்பில் திலீப் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைப்பார் என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி திலீப்புக்கு பிணை வழங்க உத்தரவிட்டார்.