lan sinlan eng

செய்தி

மணிரத்னத்தின் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

இயக்குனர் மணிரத்னத்தின் பெயரிடப்படாத தமிழ் - தெலுங்குப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகப் பேசிய ஐஸ்வர்யா, ''நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். மணி சாருடன் வேலை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இந்தப் படத்தில் நான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஆனால் எந்தக் கதாநாயகனுடன் ஜோடியாக நடிக்கிறேன் என்பது தெரியவில்லை'' என்றார்.

இந்த ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட உள்ள படத்தில், ஜோதிகாவும் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தில் நடிக்கும் கதாநாயகர்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தெலுங்கு நடிகர் நானி நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெற்றிமாறனின் 'வட சென்னை' மற்றும் கெளதம் மேனனின் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களில் ஐஸ்வர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

Sinhala Arts

UP TOGGLE DOWN

பிரபலமான செய்தி