காலா' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை இரண்டு முறை சந்தித்து இயக்குனர் வெற்றிமாறன் கதையை பற்றி விவாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ், சமுத்திரக்கனி, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வடசென்னை'. மூன்று பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. முதற்பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது.
இந்நிலையில், ‘வட சென்னை’ படத்தை அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கும் எண்ணத்தில் கதை தயார் செய்து வருகிறார் வெற்றிமாறன். ‘
காலா’ படப்பிடிப்பில் இருந்து வரும் ரஜினியிடம் இதற்கான பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
"‘காலா’ படப்பிடிப்பில் இரண்டு முறை ரஜினியை சந்தித்து கதை குறித்து சில விஷயங்களை இயக்குனர் வெற்றிமாறன் பேசியது உண்மை தான். இருவரும் இணைந்து பணியாற்றும் சூழல் உருவாகியுள்ளது. கதை தொடர்பான முழு வேலைகளையும் முடித்துவிட்டு படத்தை அடுத்த ஆண்டில் தான் தொடங்குவார்கள்" என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ரஜினி நடித்து வரும் ‘காலா’, இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் ‘2.0’ ஆகிய படங்களின் பணிகள் முடிந்து வெளியாவதற்கும் இந்தப்பணிகள் தொடங்குவதற்கும் சரியாக திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.