lan sinlan eng

புதன் கிரகத்திற்கு செல்லும் ஐரோப்பிய, ஜப்பானிய செயற்கைக்கோள்கள் காட்சிக்கு

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

புதன் கிரகத்திற்கு கொண்டு செல்லும் பெப்பிகொலம்போ விண்வெளி பயணத்திற்கு பயன்படுத்தப்படும் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய செயற்கைக்கோள்கள் இன்று காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

இரு விண்கலங்களும் பூமியிலிருந்து ஏவப்படுவதற்குமுன் இணைக்கப்படும். தொடர்ந்து, பூமியின் உட்புற பகுதிக்கு இரு விண்கலங்களும் பயணிக்கும்.

புதன் கிரகத்தை சென்றடைந்தவுடன் இரு கலன்களும் பிரிந்து வித்தியாசமான ஆனால் ஒன்றுக்கொன்று பயன்தரக்கூடிய கண்காணிப்பை மேற்கொள்ளும்.

''அடுக்கப்பட்ட விமானங்கள்'' என்று கூறப்படும் இரு விண்கலங்களின் இணைப்பின் முழுமையையும் இன்றைய இறுதியாக பார்க்க முடியும்.

இந்த நிகழ்வு நெதர்லாண்டின் நூர்ட்விக்கில் அமைந்துள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தில் நடைபெறுகிறது.

ஐரோப்பாவின் மெர்க்குரி பிளானட்டரி ஆர்பிட்டர் மற்றும் ஜப்பானின் மெர்க்குரி மேக்னேட்டோஸ்பெரிக் ஆர்பிட்டர் ஆகிய செயற்கைக்கோள்கள் ஃபிரெஞ்சு கினியாவில் உள்ள விண்கலம் ஏவுதளத்திலிருந்து ஏவப்படுவதற்குமுன், தனித்தனியாக இறுதி சோதனைகளை நடத்துவதற்காக இரண்டும் பிரிக்கப்பட உள்ளன.

இந்த இரட்டை செயற்கைக்கோள் பயணம் 2018ஆம் ஆண்டில் விண்வெளியில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒக்டோபர் மாதம் ஏரியன் விண்கலம் ஒன்று அனைத்து சாதனங்களையும் விண்வெளிக்கு கொண்டு செல்ல உள்ளன.

இலக்கை அடைய இந்த இரட்டை செயற்கைக்கோள்களுக்கும் ஏழு ஆண்டு காலம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி