lan sinlan eng

எனக்கும் ஓட்டங்களை எடுக்க வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சி

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோனியின் அரைசதத்தினாலும் சுழற்பந்து வீச்சாளர்களின் திறமையான பந்துவீச்சினாலும் இந்திய அணிக்கு வெற்றி உறுதியானது.

ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற தோனிக கருத்து வெளியிடுகையில் “கடந்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளாக அணியின் முன்வரிசை பெரிய அளவில் ஓட்டங்களை குவித்து வருகின்றனர். எனவே எனக்கும் ஓட்டங்களை எடுக்க வாய்ப்புக் கிடைத்தது குறித்து நல்லதாக உணர்கிறேன்.

இடைப்பட்ட ஓவர்களில் ஓட்டங்கள் மந்தமானதற்குக் காரணம் களத்தின் தன்மை, பவுன்சர் பந்துகளின் சீரற்ற தன்மை இருந்தது, பந்து வரும் வேகத்திலும் கூட சீரற்ற தன்மை இருந்தது, ஆனால் அந்தத் தருணத்தில் இணைப்பாட்டம் கட்டமைப்பது முக்கியமாகப்பட்டது.

நான் என் மனதில் 250 ஓட்டங்களையே இலக்காக நிர்ணயித்திருந்தேன். அதை எட்டினோம், இந்த ஓட்ட எண்ணிக்கையை பந்துவீச்சாளர்களும் வெற்றியாக மாற்றமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனாலும் அவர்கள் நன்றாக வீசுவது முக்கியம்.

சுழற்பந்து வீச்சாளர்களின் அறிவுரைகள் வழங்குவது அவசியம். ஐபிஎல், டி20 போட்டிகள் என்று குல்தீப் நிறைய விளையாடினாலும் சர்வதேச மட்டத்தில் வேறுபட்ட அல்லது மாற்றுப்பந்துகளை எப்போது வீச வேண்டும் என்பதை அறிந்திருப்பது அவசியமாகிறது. 5-10 போட்டிகளில் அனுபவம் பெற்ற பிறகு குல்தீப் யாதவ்வே இதனை உணர்ந்தறிவார்.

கடந்த போட்டியை ஒப்பிடும் போது குல்தீப் இந்தப் போட்டியில் நன்றாகவே வீசினார்” எனக் குறிப்பிட்டுள்ளார் தோனி.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி