lan sinlan eng

எனக்கும் கோஹ்லிக்கும் இடையிலான முறுகலை தீர்க்க முயற்சிக்கப்பட்டது

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்த அனில் கும்ப்ளே, விராட் கோஹ்லிக்கும் தனக்கும் இடையே இருந்த பிரச்சினைகளைத் தீர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முயன்றதாகவும் எனினும் அது பயனளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நேற்று முன்தினமே, முதன்முறையாக கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தன்னிடம், அணியின் தலைவருக்கு தன்னுடைய பயிற்சி முறை குறித்து விமர்சனங்கள் இருப்பதாகவும், பயிற்சியாளராகத் தான் தொடர்ந்து நீடிப்பது குறித்து விராட் கோஹ்லிக்கு சிக்கல் இருப்பதாகவும் தன்னிடம் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.

“கிரிக்கெட் நிர்வாகக் குழு தன்மீது நம்பிக்கை வைத்து என்னைத் தலைமைப் பயிற்சியாளராக நீடிக்கக் கோரியதை கௌரவமாக கருதுகிறேன். கடந்த ஓராண்டில் அணி செய்த சாதனைகளின் பெருமைகள் தலைவர் ஒட்டுமொத்த அணி, துணைப்பயிற்சியாளர்கள் ஆகியோரையே சாரும்.

இந்தத் தகவலை நான் பதிவிடும் வேளையில், திங்களன்றுதான் முதல் முறையாக தலைவருக்கு எனது பயிற்சி வழிமுறைகள் மீதும், தொடர்ந்து நான் பயிற்சியாளராக நீடிப்பது குறித்தும் மாற்றுக் கருத்துகள் இருந்து வந்துள்ளதை பிசிசிஐ எனக்கு தெரிவித்தது.

இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. காரணம் நான் எப்போதும் தலைவர் பயிற்சியாளர் ஆகியோருக்கிடையேயான வரம்புகளை மதிப்பவன். பிசிசி எனக்கும் தலைவருக்கும் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்தது, ஆனால் கூட்டணி ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. எனவே நான் வெளியேறுவதுதான் சிறந்த முடிவு என்று கருதினேன்.

தொழில்நேர்த்தி, கட்டுக்கோப்பு, கடமை உணர்வு, நேர்மை, பாராட்டு தெரிவிக்கும் திறமைகள், பலதரப்பட்ட பார்வைகள் ஆகிய முக்கிய தனிக்கூறுகளை நான் அணியிடத்தில் செலுத்தியிருக்கிறேன்.

ஒரு கூட்டணி திறம்பட செயல்பட வேண்டுமெனில் இவை மதிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. பயிற்சியாளரின் பங்கு என்பதை ‘கண்ணாடியை காட்டுவது’ போல்தான் கருதுகிறேன், இதன் மூலம்தான் அணியின் நலனுக்காக சுய முன்னேற்றத்தை செலுத்த முடியும்.

ஆகவே இந்தப் பொறுப்புக்கு பொருத்தமுடையவர்களை நியமிக்க உதவுமாறு நான் என் பொறுப்பை ஒப்படைப்பதே சிறந்தது என்று நம்புகிறேன்.

நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நான் பணியாற்றியதை பெரிய கௌரவமாக கருதுகிறேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி