lan sinlan eng

மிக்கி ஆர்தருக்கு வானளாவிய அதிகாரம் கொடுத்தது யார்?

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தருக்கு வானளாவிய அதிகாரம் கொடுத்தது யார்? இந்நிலை நீடித்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் மேலும் பிரச்சினைகளையே சந்திக்கும் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதிர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் “இந்த அயல்நாட்டு பயிற்சியாளர் மிக்கி ஆர்தருக்கு இவ்வளவு அதிகாரம் கொடுத்தது யார் என்று தெரியவில்லை, உமர் அக்மல் சொஹைல் கான் கிரிக்கெட் வாழ்க்கையை நாசமாக்க இவர் யார்? அணியின் தலைமைத் தெரிவாளர் இன்சமாம் உல் ஹக் மீதும் எனக்கு திருப்தியில்லை. பயிற்சியாளர் முன் இவர் அதிகாரமற்ற கோழையாக இருக்கிறார்.

சாம்பியன்ஸ் கிண்ணத்தில் அரையிறுதிக்கு முன்னேறி விட்டோம் என்பது சொஹைல் கான், உமர் அக்மலுக்கு இவர் செய்ததை நியாயப்படுத்தாது. சில வீரர்களுக்கு இவர் சாதகமாக இருக்கிறார், மொஹமட் அமிர் அப்படித்தான் அணியில் இருக்கிறார்.

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அமிர் 5 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டியில் கைப்பற்றினார், ஆனால் சொஹைல் கான் இருமுறை இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் சீராகவே விளையாடினார். ஆனால் அவர் இன்று அணியில் இல்லை.

தகுதியில்லாத வீரர்கள் தற்போது அணியில் உள்ளனர். உமர் அக்மல் நடத்தப்பட்ட விதம் அவரை இங்கிலாந்திலிருந்து அனுப்பிய விதம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரணை நடத்த வேண்டும்.

இந்த முடிவுகளுக்கெல்லாம் யார் காரணம் என்பது தெரியவிலை. நாட்டில் பெரிய பெரிய வீர்ர்களெல்லாம் இருந்தும் நாம் ஒரு அயல்நாட்டுப் பயிற்சியாளரை கொண்டு வருகிறோம், அவரோ நம் வீரர்களை சூதாடிகள் என்று கூறி சில வீரர்களுக்கு அநீதி இழைக்கிறார்” என்று கடுமையாக சாடியுள்ளார்.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி