lan sinlan eng

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்ததாவரை கிரிக்கெட் போட்டிகள் இல்லை

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும்வரை பாகிஸ்தான் இந்தியாவுக்கிடையே கிரிக்கெட் தொடர் நடைபெறாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவிக்கையில் "பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக எந்த முன்னெடுப்புகளையும் எடுக்கும் முன் அதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மத்திய அரசிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.

மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும்வரை இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெறாது என்பதைத் தெளிவாக கூறிக்கொள்கிறேன். இதில் சர்வதேசப் போட்டிகள் பற்றி குறிப்பிடவில்லை" என்றார்.

தீவிரவாதத் தாக்குதல் காரணமாக 2012ஆம் ஆண்டிலிருந்து இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி