lan sinlan eng

ரியல் மெட்ரிட் வெற்றி; கொண்டாட்டத்தில் இரசிகர்கள்

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

ஸ்பெயினின் முன்னணி கால்பந்தாடடக் கழகமான ரியல் மெட்ரிட் அணி லா லீகா சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதை ரியல் மெட்ரிட் அணி இரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

ரியல் மெட்ரிட் அணிக்கும் மலாக அணிக்கும் இடையில் நேற்றைய தினம் நடைபெற்ற லா லீகா கால்பந்தாட்ட சம்பியன்சிப் கிண்ண இறுதிப் போட்டியில் ரியல்மெட்ரிட் அணி இரண்டுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில்வெற்றிபெற்றுள்ளது.

ரியல் மெட்ரிட் அணி சார்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கரீம் பென்ஷீமா ஆகியோர் தலா ஒரு கோலை அடித்தனர்.

இதற்கமைய ரியல் மெட்ரிட் அணி ஐந்து வருடங்களுக்குப் பின்னர் லா லீகா கிண்ணத்தை கைப்பற்றிக்கொண்டுள்ளது.

ரியல் மெட்ரிட் அணியின் இந்த வெற்றியை அதன் ரசிகர்கள் பெரும் எடுப்பில் காணடாடி வருகின்றனர்.

நேற்று காலை சிபெலஸ் சுற்றுவட்டத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இரசிகர்கள் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய ரியல் மெட்ரிட் அணி வீரர்களுக்கு உற்சாகமான வரவேற்பளித்தனர்.

ஸ்பெயினின் முன்னணி கழகங்களுக்கிடையிலான வெற்றிக் கிண்ணப் போட்டியான லா லீகா கிண்ணத்திற்கான போட்டியில் ஏற்கனவே முன்னணியில் திகழ்ந்த ரியல் மெட்ரிட் அணி நேற்றைய போட்டியை வெற்றி தோல்வியின்றி சமன் செய்திருந்தாலே வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்திருக்கும் நிலையில் ரியல் மெட்ரிட் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி இரண்டு ஒன்று என்ற கொல் கணக்கில் வெற்றிபெற்று அணியின் பயிற்றுவிப்பாளர் ஷினடீன் ஷிடானை அதிர்ச்சியில் மூழ்கச் செய்துள்ளனர். 

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி