lan sinlan eng

தெரிவு செய்யாதது கவலை அளிக்கிறது – ரெய்னா

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு தன்னை தெரிவு செய்யாதது ஏமாற்றமாகவும், வேதனையாகவும் இருப்பதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

“இப்போது நான் என்ன கூற முடியும்? ஏமாற்றமாகவும் வேதனையாகவும் உள்ளது. இம்முறை என்னைத் தெரிவு செய்வார்கள் என்றே எதிர்பார்த்தேன்.

நான் தொடர்ந்து என்னை நிரூபித்து வருகிறேன். சீரான முறையில் ஓட்டங்களை எடுத்து வருகிறேன். ஐபிஎல் தொடரிலும் நல்ல முறையில்தான் ஆடி வருகிறேன்.

எனவே நான் தேர்வு செய்யப்படாமல் போவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் மீண்டும் எனது பேட்டிங் பேசும். நிச்சயம் நான் அணிக்கு மீண்டும் திரும்புவேன்.“ என அவர் இந்திய ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ரெய்னா 12 போட்டிகளில் 434 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி