lan sinlan eng

ரிஷப் பந்த்திற்கு குவியும் வாழ்த்துக்கள்

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

6 நான்கு ஓட்டங்கள் 9 ஆறு ஒட்டங்கள் என 43 பந்துகளில் 97 ஓட்டங்களை விளாசிய டெல்லி டெயார்டெவில்ஸ் அணியை நம்ப முடியாத வெற்றிக்கு இட்டுச் சென்ற ரிஷப் பந்த்திற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்தியாவின் வருங்கால நட்சத்திரம் என்று வர்ணிக்கப்படும் ரிஷப் பந்த்தின் ஆட்டத்தை முன்னாள், இந்நாள் வீரர்கள் பாராட்டியுள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் - 10 ஐபிஎல் போட்டிகளையும் உள்ளடக்கிக் கூறுகிறேன், நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த ஐபிஎல் இன்னிங்ஸ்.

விரேந்தர் செவாக் -   தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் துடுப்பாட்ட வீரர்களை நேசிக்கிறேன். நம்பிக்கையுடன் பந்தை அடிப்பதற்கான சிறப்புத் திறமையும் கைகூடியுள்ளது. இன்று ரிஷப் பந்த்திடமிருந்து கூடுதல் சிறப்பு வெளிவந்துள்ளது.

ஹர்பஜன் சிங்: என்னவொரு திறமை; இளம் அழகே! டாப் டாப் டாப்.

டொம் மூடி: இதைவிட சிறப்பாக ஆட முடியாது

ஜோஸ் பட்லர்: இவர் ஆடுவதைப் பார்க்க பிடிக்கிறது, என்னவொரு திறமை.

சௌரவ் கங்குலி: ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன். இவர்கள் மீது ஒரு கண் இருக்கட்டும். இவர்கள் இருவருமே ஸ்பெஷல்.

கௌதம் கம்பீர்: இளமையின் புத்துணர்ச்சி, ஆனால் மூத்தோரின் அமைதி! என்னவொரு கூட்டணி! வாழ்த்துக்கள்.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

Sinhala Arts

UP TOGGLE DOWN

பிரபலமான செய்தி