lan sinlan eng

சாம்பியன் கிண்ண தொடரில் இந்தியா பங்கேற்க வேண்டும்

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட வேண்டும் என முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராஹுல் ட்ராவிட் உள்ளிட்ட பலர் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து 12 முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் முன்னணி கிரிக்கெட் இணையத்தளம் கருத்துக்களை கேட்டறிந்துள்ளது.

சச்சின், ட்ராவிட், சஹீர் கான், குண்டப்பா விஸ்வநாத், சந்தீப் பட்டேல், சஞ்சய் மஞ்சரேக்கர், ஆகாஷ் சோப்ரா, அஜித் அகார்கர், வெங்கடேஷ் பிரசாத், சபாகரீம், முரளி கார்த்திக் மற்றும் தீப்தாஸ் குப்தா ஆகியோர் இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கும் இடையில் நிலவும், வருமான பகிர்வு விவகாரம் மற்றும் நிர்வாக முறையில் மாற்றம் ஆகியவை குறித்து பிரச்சினைகள் காரணமாக ஏப்ரல் 25ஆம் திகதி இந்திய அணியை அறிவித்திருக்க வேண்டிய காலக்கெடு கடந்து போனது.

எனினும் நடைமுறை சிக்கல்கள் காரணமாகவே தாமதமானதாக பிசிசிஐ தெரிவித்தது.

எதிர்வரும் 7ஆம் திகதி டெல்லியில் கூடும் பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்திய அணியின் பங்கேற்பு தொடர்பில் தீர்மானிக்கப்படுமென  தெரியவருகிறது. 

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி