lan sinlan eng

தொடரை இரத்து செய்தது பாகிஸ்தான்

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

பாகிஸ்தான் தனது பங்களாதேஷ் கிரிக்கெட் பயணத்தை இரத்து செய்தமை குறித்து பங்களாதேஷ் அதிர்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கூறும்போது, “ஒரு மாதம் முன்பு வரை இந்தத் தொடர் நடைபெறும் என்றே பேசி வந்தோம். இப்போது பாகிஸ்தானின் இந்த முடிவு உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்தது.

இந்நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை குறிப்பிடுகையில் “2015இல் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்ட போது இரு சபைகளும் இடையே நிதிப் பிரச்சினைகள் காணப்பட்டன. எனினும் 2017 வரை இங்கு வந்து ஆடுவோம் என்றே பாகிஸ்தான் கூறி வந்தது.

அதாவது பங்களாதேஷுக்கு பாகிஸ்தான் வருகை தரும் முன்பாக பாகிஸ்தானில் இரண்டு இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடுமாறு  கேட்டனர். நாங்கள் அதை நிராகரித்தோம்.

இப்போது அதிகாரபூர்வமாக தொடர் இரத்து என்றால் நாங்கள் அவர்களுடன் பேசியாக வேண்டும். நிதி விவகாரங்கள் தீர்க்கப்பட்டுவிட்டன“ எனக் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி பங்களாதேஷில் விளையாடி உறுதி மொழியைக் காப்பாற்றியது, ஆனால் பங்களாதேஷ் பாகிஸ்தானில் வந்து விளையாடவில்லை. எனவே தொடரை இரத்து செய்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி