lan sinlan eng

மோட்டார் சைக்கிள் போட்டியில் சாதிக்கும் இளைஞர் “புரூடி“

User Rating: 1 / 5

Star ActiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

நுவரெலியாவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிளோட்டப் போட்டியில் நுவரெலியா  - ஹைபொரஸ்ட்டைச் சேர்ந்த சூரியகுமார் இஸ்கா புரூடி ஐந்தாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு நடைபெற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டிகளின் 13 பேர் பங்கேற்ற “CBR 250“ பிரிவு போட்டியில் புரூடி ஐந்தாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

சுமார் 25 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட போட்டியை 8 நிமிடங்களில் நிறைவு செய்த புரூடி இந்த பிரிவில் பங்கேற்ற ஒரே தமிழ் போட்டியாளர் என்பது விசேட அம்சமாகும்.

ஸ்ரீலங்காவின் பலராலும் அறியப்பட்ட புரூடி இதற்கு முன்னர் கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற இதே பிரிவு போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

தொடர்ச்சியாக கடந்த பல வருடங்களாக 14 தேசிய ரீதியிலான வெற்றிகளை குவித்துள்ள இஸ்கா புரூடி அடுத்த மாதம் மீரிகமவில் நடைபெறவுள்ள மோட்டார் சைக்கிளோட்டப் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார்.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி