lan sinlan eng

விதிமுறையை மீறிய தோனிக்கு எச்சரிக்கை

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான புனே அணியின் நேற்றைய போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிமுறையை மீறியதான குற்றச்சாட்டில் தோனிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிராக நடந்து கொண்டதாக தோனி ஒப்புக் கொண்டதால் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று ஐபிஎல் அறிக்கை தெரிவிக்கிறது.

இத்தகைய விதிமீறலில் ஆட்ட நடுவரின் முடிவே இறுதியானது. நேற்றைய போட்டியில் பொலார்ட் எல்பிடபிள்யு ஆட்டமிழப்பு சரி எனினும் நடுவர் ஆட்டமிழப்பை வழங்கவில்லை.

தோனி டி.ஆர்.எஸ் முறைக்கு கோரிக்கை விடுத்தார். எனினும் இருபதுக்கு-20 கிரிக்கெட்டில் டிஆர்எஸ் முறை இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.  

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி