lan sinlan eng

இனி நான்கு நாள் கிரிக்கெட் போட்டி

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதற்கு சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியுள்ளது. டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்கள் போட்டிகளாகவே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகலிரவு டெஸ்ட் போட்டிகள் எவ்வாறு பரீட்ச்சார்த்தமாக தற்போது நடைபெற்று வருகின்றனவோ அதே போன்று இருநாடுகளுக்கான டெஸ்ட் தொடர்களில் அந்த நாடுகள் விரும்பினால் ஒரு டெஸ்ட் போட்டியை நான்கு நாட்கள் போட்டியாக நடத்தலாம்.

ஆனால் நான்கு நாட்கள் போட்டிகளுக்கான விதிமுறைகள் பற்றி இதுவரையில் எந்த முடிவுகளும்எடுக்கப்படவில்லை. தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை, டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள சிம்பாவ்பே அணியுடனான தொடரில், நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டியினை நடாத்த அனுமதி கோரியிருந்தது.

இந்த அனுமதியின்மூலம் அந்தப்போட்டி நாடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த நான்கு நாட்கள் போட்டிகளானது புதிய டெஸ்ட் அணிகளுக்கு, பலமான அணிகளுடன் மோதுவதற்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

முன்னணி அணிகளுடன் இடைவெளியை குறைப்பதற்கு இந்த மாற்றம் நல்ல முறையில் அமையும். டெஸ்ட் போட்டிகளின் விறுவிறுப்பு குறைவடைந்து வருகின்றது.

அதற்கான பார்வையாளர்கள் குறைவைடைகின்றார்கள் எனின் என்ன மாற்றங்களை செய்து அதனை நாங்கள் உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டுமென்பதை கண்டுபிடித்து செயற்படவேண்டும்.“ என சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி