lan sinlan eng

உலகக் கிண்ண போட்டிகளுக்கு தகுதி பெற்றது ஸ்பெய்ன்

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

அல்பேனியாவை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி ரஷ்யாவில் நடைபெறும் 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளுக்கு தகுதி பெற்றது.

ஸ்பெயின் அணியில் ரொட்ரிகோ, இஸ்கோ, டியாகோ ஆகியோர் முதல் பாதியிலேயே கோல்களை போட்டனர். இதனால் 9 போட்டிகளில் 8 போட்டிகளில் ஸ்பெயின் வென்று ஜி குழுவிலிருந்து உலகக் கிண்ணத்திற்கான தகுதியை உறுதி செய்துள்ளது.

ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்தில் இஸ்கோவின் பாஸை தன் நெஞ்சில் வாங்கி கட்டுப்படுத்திய ரொட்ரிகோ பிறகு இடது காலால் உதைக்க அல்பேனியா கோல் கீப்பர் எட்ரிட் பெரிஷாவைத் தாண்டி கோலானது.

இதனையடுத்து 24ஆவது நிமிடத்தில் இஸ்கோ ஒரு சக்தி வாய்ந்த ஷாட்டில் இரண்டாவது கோலை அடிக்க 4 நிமிடங்கள் கழித்து டியாகோ 3ஆவது கோலை அடித்தார்.

அறிமுக ஸ்பெயின் வீரர் அல்வாரோ ஓட்ரியோசோலா வலது புறம் அருமையாக ஆடி பிறகு ஒரு பந்தை தூக்கி பாஸ் செய்ய டியாகோ தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தினார், மிக அருமையான கோலாக இது அமைந்தது.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி