இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை அபுதாபியில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 419 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 422 ஓட்டங்களைப்பெற்றதோடு, 3 ஓட்டங்களால் இலங்கை அணியைவிட முன்னிலை வகித்தது.
இந்நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களைப்பெற்றது.
இந்நிலையில் போட்டியின் இறுதி நாளான இன்று 136 ஓட்டங்கள் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் ஆரம்பம் மதலே தடுமாறிய பாகிஸ்தான் 47 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இந்த வெற்றியுடள் இலங்கை அணி இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.